கிளிநொச்சியில் பொதுமக்களின் காணிகள் இராணுவத்தின் தேவைக்காக சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக நாளை (புதன்கிழமை) போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி – பூநகரிப் பிரதேசத்தில் இராணுவத்தின் தேவைக்காக 27 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களும் மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இராணுவத்தின் தேவைக்காக குறித்த காணியை சுவீகரிப்பதற்கு நாளை (புதன்கிழமை) நில அளவை திணைக்களத்தினர் அங்கு சென்று அளவீடுகளை மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இந்த எதிர்ப்புப் போராட்டம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமிக்கவுள்ளமை தொடர்பிலும் இதற்கான அளவீடுகளை முன்னெடுப்பது தொடர்பிலும் பூநகரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இராணுவத்தினர் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இதேவேளை பூநகரி பரமன்கிராய் வெட்டுக்காட்டுப் பகுதியில் சுமார் 17 ஏக்கர் நிலப்பகுதியை கடந்த 2ஆம் திகதி இராணுவத்தினர் அபகரிப்பதற்காய் சுவீகரிப்பு செய்ய இருந்தநிலையில் மக்களின் எதிர்ப்பை அடுத்து அது கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here