கிளிநொச்சி, பூநகரி பகுதியில் மான் இறைச்சியை கொண்டு சென்ற இருவருக்கு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம், நேற்று (திங்கட்கிழமை) 15,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டார்.

கிளிநொச்சி, பூநகரி பகுதியில் 8 கிலோகிராம் மான் இறைச்சியை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற இருவருக்கே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, பூநகரி பகுதியில் கடந்த சனிக்கிழமை 8 கிலோகிராம் மான் இறைச்சியை மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்ற இருவரை, பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது நீதவான் தண்டம் விதித்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here