கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.

66-1ஆவது பிரிகேட் தலைமையகத்துக்கு அருகிலேயே, இந்த புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பௌத்த வழிபாட்டுத் தலத்தை 66ஆவது டிவிசனின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விக்கிரமரத்ன கடந்த மாதம் 29ஆம் திகதி திறந்து வைத்துள்ளார்.

66-1ஆவது பிரிகேட் தளபதி லெப்.கேணல் எக்கநாயக்கவின் உத்தரவின் பேரில், அந்தப்படைப்பிரிவில் உள்ள அதிகாரிகளின் நிதியுதவி மற்றும், படையினரின் மனித வள உதவியுடன் இந்த வழிபாட்டுத் தலம் அமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here