நெற்புலவு
நெற்புலவு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட நெற்புலவு கிராமத்தைச் சேர்ந்த  140 குடும்பங்களுக்கு பிரித்தானியாவைச் சேர்ந்த சைவத்திருக்கோயில்களின் ஒன்றியம் உலர்உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மிகத்தாழ்ந்த பகுதியான நெற்புலவு கிராமம் நீரினால் சூழப்பட்டு போக்குவரத்துக்கள் தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில் காணப்பட்டது..

”வீட்டுத்தோட்டங்கள், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு தொழில்வாய்ப்புக்கள்  இல்லாமல் இருந்தவேளை பிரித்தானியா சைவத்திருக்கோயில்களின் ஒன்றியம் இந்த உணவுப்பொதிகளை வழங்கியது எமக்கு ஒரு ஆறுதலை தருகின்றது”  என மக்கள் நன்றி உணர்வோடு தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயகுமார்,  கிராம அலுவலகர் தவராஜா  SDS, தலைவர் றஜித்குமார்  மாவட்டத்தின் கொள்கை பரப்பு செயலாளர் வேழமாலிகிதன்   மற்றும் மாதர் சங்கத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here