யாழ்ப்பாணம்- பூநகரி A32 வீதியில் படுகாயமடைந்த நிலையில் மயங்கி கிடந்த இருவர் தற்செயலாக அந்த வழியால் வந்த அம்புலன்ஸ் வண்டியினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் மாலை A32 வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாக யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அம்புலன்ஸ் வண்டியில் பயணித்த வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தகவல் தருகையில்,

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த போது காயமடைந்து அதிக இரத்தம் சிந்திய நிலையில் இவர்களை கண்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்த்தோம்.

அவர்கள் அதிக இரத்தப் போக்கால் மயங்கியிருந்தனர். அவர்கள் விபத்துக்குள்ளாகி மீட்கப்படாத நிலையில் நீண்ட நேரம் அங்கேயே கிடந்திருக்கிறார்கள். என தெரிவித்தார்.

இதேவேளை குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்.மறவன்புலோ மத்தியை சேர்ந்த க.குணரத்தினம்(வயது60), எஸ்.மோகிந்தன்(வயது18) என தெரியவந்துள்ளது.

poonakari-acci-2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here