பூநகரி
பூநகரி

பூநகரி- மன்னார் வீதியில் மேய்ச்சலுக்காக சாய்த்து வரப்பட்ட கால் நடைகளை இ.போ.ச பேருந்து மோதித் தள்ளியதில் 9 மாடுகள் உயிரிழந்த்துள்ளன.
நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு- துணுக்காய் பகுதியிலிருந்து பூநகரி பகுதிக்கு கால் நடைகளை மேய்ச்சலுக்காக சாய்த்து வந்த நிலையில் வேகமாக வந்த இ.போ.ச பேருந்து மாடுகளை மோதி தள்ளியுள்ளது. இதில் 9 மாடுகள் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் நேரில் சென்று பார்வையிட்டார்.

தலா 60 ஆயிரம் ரூபா பெறுமதியான மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்திருக்கும் கால்நடை உரிமையாளர்கள், தாம் 45 மாடுகளை மூன்றாக பிரித்தே வீதியால் அழைத்து வந்ததாகவும்,

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமலேயே மாடுகள் மீது பேருந்து மோதியதாகவும் கூறியதுடன், தமக்கு மேய்ச்சல் தறை ஒன்று இல்லாமையினாலேயே தாம் பூநகரி பகுதிக்கு கால் நடைகளை கொண்டுவரும் நிலை வந்ததாகவும் தமக்கு மேச்சல் தறை ஒன்றை பெற்றுக் கொடுக்குமாறும் கேட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவத்தில் பேருந்து உரிமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

cow_dead_002 cow_dead_003

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here