கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்கு கடந்த 29ம்நாள் சென்ற பா.உறுப்பினர் சி.சிறீதரன் அங்கு முழங்காவில் நாச்சுக்குடா சந்தைப்பகுதி மற்றும் வர்த்தக நிலையங்களை பார்வையிட்டார்.

இதன் வாணிபர்கள் வர்த்தகர் சங்கத்தை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன் சந்தையில் காணப்படும் குறைபாடுகள் மலசல கூட வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் கடைகள் வழங்கல்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் குறைபாடுகளை தீர்ப்பதற்காக உரிய அதிகாரிகளுடன் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் வேழமாலிகிதன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பூநகரி பிரதேச பிரமுகர்கள் குவேந்திரன் தனராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here