கிளிநொச்சி பூநகரி முட்கொம்பன் பகுதியில் விறகு வெட்டுதல் என்ற போர்வையில் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முட்கொம்பன் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் பெருமளவான காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

சுட்டவிரோதமான முறையில் பாலை முதிரை போன்ற மரங்கள் அறுக்கப்பட்டு இரவு வேளைகளிலும் பகல் வேளைகளிலும் சிறிய கப்ரக வாகனங்கள் மற்றும் பெரிய வாகனங்களிலும் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

இதேவேளை வெளியிடங்களுக்கு வெளியிடங்களில் இருந்து வருபவர்;களால் விறகுத்;தேவைக்காக விறகுகளை எடுத்துச் செல்லும் போர்வையில் பெறுமதி வாய்ந்த காட்டு மரங்கள் பச்சையாக பெருமளவில் வெட்டப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் இவ்வாறு காடழிப்பு தொடர்பாக வனவளத்திணைக்களத்திற்கோ அல்லது பொலிசாருக்கோ தகவல்களை வழங்கியபோதும் உரிய நடவடிக்கை எதனையும் இவர்கள் எடுப்பதில்லை எனவும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here