சங்குப்பிட்டி
சங்குப்பிட்டி

சங்குப்பிட்டி அருகாமையில் உள்ள கேரத் தீவுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10.00 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து பூநகரி நோக்கி பயணித்த உழவு இயந்திரம் ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் கேரத்தீவுப் பகுதியில் வைத்து ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here