கிளிநொச்சி- பூநகரி பகுதியில் A32 நெடுஞ்சாலையில் உள்ள மண்டக்கல்லாறு பாலம் சேதமடைந்துள்ள நிலையில் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக கிளிநொச்சி பகுதியில் பெய்த கனமழை காரணமாகவும் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமையினாலும் மேற்படி பாலத்தை மேவி வெள்ளம் பாய்ந்து வருகின்றது.

இதனால் ஜெயபுரம், முழங்காவில், வெள்ளாங்குளம், மன்னார் உள்ளிட்ட 15ற்கும் மேற்பட்ட பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் சங்கம், பிரதேச செயலகம், கடற்படை மற்றும் படையினர் இணைந்து மக்களை படகு மூலம் ஏற்றி இறக்கி வருகின்றனர்.

இந்நிலையில் மண்டக்கல்லாறு பாலத்தின் இரு பகுதியில் இருந்தும் பயணிகள் போக்குவரத்து சேவை நடைபெறுகின்றது.

இந்நிலையில் நோயாளர்கள், பெண்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் A32 பாதை புனரமைக்கப்பட்ட போது இந்த பாலத்தின் புனரமைப்பு கண்டுகொள்ளப்படவில்லை எனவும், இந்த பாலத்தினால் தாம் பாரிய அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கும் மக்கள், இந்த விடயத்தில் முதலமைச்சர் மற்றும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here