Poonakary

கிளி­நொச்சி பூந­கரி பிர­தேச செய­லக பிரி­வி­லுள்ள கொக்­கு­டையான் மாளாப்புக் குளத்தை புன­ர­மைத்து பூந­கரி பிர­தேசம் பாலை­வ­ன­மாக மாறு­வ­தனை தடுக்­கு­மாறு பூந­கரி வடக்கு பிர­தேச கமக்­கார அமைப்­புகள் கோரிக்கை விடுத்­துள்­ளன.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கிளி­நொச்சி மாவட்டச் செய­ல­கத்தில் இடம்­பெற்ற கிளி­நொச்சி மாவட்­டத்தின் 2016 ஆம் ஆண்­டுக்­கான அபி­வி­ருத்தித் திட்­டங்­களை இறு­தி­யாக்­குதல் தொடர்­பான கூட்­டத்தில் பூந­கரி கமக்­கார அமைப்­பு­களின் சார்பில் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது

கொக்­கு­டையான் மாளாப்பு அல்­லது பூந­க­ரி­குளம் எனக் குறிப்­பி­டப்­படும் குளத்தை புன­ர­மைப்புச் செய்­வதன் மூலம் பூந­கரி வடக்கு பிர­தே­சத்தின் நிலத்­தடி நீர் மக்கள் வரு­டந்­தோறும் எதிர்­நோக்கும் குடிநீர் பிரச்­சினை விவ­சா­யத்­திற்­கான நீர் போன்ற பிரச்­சி­னை­க­ளுடன் மிக முக்­கிய பிரச்­சி­னை­யான நிலம் படிப்­ப­டி­யாக உவ­ராக மாறி­வ­ருதல் என்­ப­ன­வற்­றுக்கு தீர்வு கிடைக்கும்.

வரு­டந்­தோறும் பூந­கரி வடக்கு பிர­தேச வாழ் மக்கள் தங்­க­ளது குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொள்­வதில் பெரும் நெருக்­க­டி­களை சந்­தித்து வரு­கின்­றனர்.

பூந­கரி வடக்கில் சனத்­தொகை பெரு­ம­ளவில் குறை­வ­டைந்து வரு­வ­தற்கு அங்கு நில­வு­கின்ற நீர்ப் பிரச்­சி­னையே பிர­தான காரணம். இதனால் மக்கள் இடம்­பெ­யர்ந்து வேறு இடங்­க­ளுக்கு சென்று வாழ்ந்து வரு­கின்­றனர். எனவே குறித்த குளத்தை விரை­வாக புன­ர­மைப்புச் செய்­வ­தற்கு பொருத்­த­மான நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஒரு வரு­டத்­திற்கு முன் இக்­குளம் புன­ர­மைப்புச் செய்­வ­தற்­கான பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. உரிய தரப்­புகள் நேர­டி­யாக விஜயம் செய்து நிலை­மை­களை ஆராய்ந்து சென்­றனர்.

திட்ட மதிப்­பீடுகள் மற்றும் கள ஆய்­வுகள் என்­ப­வற்­றுக்கு 15 மில்­லியன் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. ஆனால் தற்­போது எவ்­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. குறித்த குளம் அமை­ய­வுள்ள பிர­தே­சத்­திற்கு ஊடாக வரு­டந்­தோறும் பெரு­ம­ளவு மழை நீர் கடலை நோக்கிச் செல்­கி­றது.

கொக்­கு­டையான் மாளாப்­பு­கு­ளத்தை புனரரைமப்புச் செய்வ-தன் மூலமே வரலாற்று தொன்மை மிக்க பூநகரி வடக்கு பிரதேசத்தை பாதுகாக்க முடியும் இல்லையெனில் தற்போது இருக்கின்ற மக்களும் இடம்பெயர்ந்து சென்று விடுவார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here