நீங்களும் நிருபராகலாம்

உங்களுக்கு நிருபராக விருப்பமா? உங்கள் எழுத்து திறமையும், எண்ணங்களையும் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பும் நபரா? உங்கள் பகுதியில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளை உலகிற்கு நீங்கள் வெளிப்படுத்த விரும்புகிறீர்களா? சமூக நல மாற்று சிந்தனை கொண்டவரா? உங்கள் எண்ணங்களையும், எழுத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

 

அதற்கான வாய்ப்பை நாங்கள் உங்களுக்கு தருகிறோம். நீங்களும் நிருபராகலாம். உங்களுடன் நாங்களும்,எங்களுடன் நீங்களும் இணைந்து பூநகரிக்கு ஒரு புதிய சிந்தனையை உருவாக்கலாம். நீங்கள் அனுப்பும் செய்தி கட்டுரைகள் மற்றும் படங்களை உங்கள் முகவரியுடன் பூநகரி இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

 

நீங்கள் எழுத நினைப்பதை தமிழில்(UNICODE) தட்டச்சு செய்து, அவற்றை எங்களுக்கு கீழ்க்காணும் மின்னஞ்சல் (E-Mail) முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதும்.

 

செய்தி அனுப்பும் போது உங்களுடைய ‘பாஸ்போர்ட்’ அளவு புகைப்படம்  ஒன்றையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். மறக்காமல் உங்களுடைய தொலைபேசி அல்லது செல்பேசி எண்ணைக் குறிப்பிடவும்.

படங்களுடன் அனுப்பினால் மிகவும் நல்லது.

நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:- info (@)poonakary.com