பூநகரி பற்றி

பூநகரி இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பிரதேச செயலாளர் பிரிவாகும்.இதனுடைய உள்ளூராட்சிமன்றமாக பூநகரி பிரதேச சபை விளங்குகின்றது. இப்பிரதேசம் ஒரு குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வுக் களமும் ஆகும். பூநகரி சங்குபிட்டி பாலம் யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கான மாற்றுப் பாதையாகும்.பூநகரியில் விளையும் மொட்டைகறுப்பன்,பச்சைப்பெருமாள் ஆகிய பாரம்பரிய நெல்லினங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் அரிசி உலகின் தலைசிறந்த அரிசி வகைகளுள் ஒன்றாகும்.பச்சைபெருமாள் அரிசி நீரிழிவு நோயை கட்டுபடுத்தவல்லது. பூநகரி அரிசியை மக்கள் அதிகம் விரும்புவதால் உள்ளூர் சந்தை முதல் உலக சந்தை வரையில் நல்ல கேள்வி நிலவுகின்றது.

பூநகரி-கௌதாரிமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள சோழர் காலத்து பழமையான சிவாலயம். இன்று அழியும் தருவாயில் உள்ளது.