மக்கள் பசி போக்கி பணி தொடரும் - பூநகரி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா!

புலப்பெயர் தேசத்தில் வாழ்ந்த போதிலும் தாம்  பிறந்து வாழ்ந்த மண்ணில் வாழும் மக்களை நேசிக்கும் எமது உறவுகளினால் உருவாகிய பூநகரி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா அமைப்பானது இன்றைய சூழ்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் இலங்கை அரசினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக அன்றாடம் கூலி வேலை செய்து தம் குடும்பத்தை நடாத்தி  வந்த பல குடும்பங்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கே அவதிப்படுவதை அவதானித்த இவ் ஒன்றியமானது மக்களின் பசி போக்கும் பணியை மேற்கொள்ள முன்வந்தது.

மக்கள் பசி போக்கி பணி தொடரும் - பூநகரி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா!
படம்: பூநகரி மத்திய நண்பர் விளையாட்டுக்கழகம்

புலப்பெயர் தேசத்தில் வாழ்ந்த போதிலும் தாம்  பிறந்து வாழ்ந்த மண்ணில் வாழும் மக்களை நேசிக்கும் எமது உறவுகளினால் உருவாகிய பூநகரி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா அமைப்பானது இன்றைய சூழ்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் இலங்கை அரசினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக அன்றாடம் கூலி வேலை செய்து தம் குடும்பத்தை நடாத்தி  வந்த பல குடும்பங்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கே அவதிப்படுவதை அவதானித்த இவ் ஒன்றியமானது மக்களின் பசி போக்கும் பணியை மேற்கொள்ள முன்வந்தது.

அதன் அடிப்படையில் பணியை இலகுபடுத்தும் வகையில் பூநகரிப் பிரதேசத்தை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பூநகரியில் பொதுப்பணியாற்றிவரும் தொண்டர்கள் மூலமாக 1000 ரூபா பெறுமதியான அத்தியவசிய உணவுப் பொருட்களை நேற்றும் இன்றும் பகிர்து வழங்கியுள்ளது.

அந்த வகையில் நாம் பொறுப்பேற்றுக்கொண்ட கரியாலை , நாகபடுவான், குமுழமுனை மற்றும் நொச்சிமுனை ஆகிய பகுதிகளில் 135 பொதிகளும் கிராஞ்சி,வேரவில் மற்றும் வளைப்பாடு ஆகிய பகுதிகளில் 165 பொதிகளும் மொத்தமாக இன்று எம்மால் மூன்று லட்சம்(300000.00) பெறுமதியான 300 பொதிகள் பூநகரி பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கமைவாக கிராம அலுவலர்கள் மற்றும் அபிவிருத்து உத்தியோகத்தர்களின் துணையுடனும் சில பிரதேச வாசிகளின் ஒத்துழைப்புடன் இப் பொதிகள் பகிர்ந்து வழங்கப்பட்டன.

அந்த வகையில் இப்பணிக்கு முழுமையான நிதிப்பங்களிப்பை மேற்கொண்ட பூநகரி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா அமைப்பின் சகல உறுப்பினர்களுக்கும்.எம்மிடம் தொடர்பை ஏற்படுத்தி எப்பொழுதும் ஆலோசனைகளையும் நிலைமைகளையும் ஆராயும் லண்டன திரு வ.அரவிந்தன் அண்ணனுக்கும் எமது நன்றிகள்.  பொருட்களை பொதி செய்ய ஒத்துழைப்பு வழங்கிய பல்லவராயன்கட்டு சிறிமுருகன் விளையாட்டுக்கழக அங்கத்தவர்களுக்கும் போக்குவரத்து ஒழுங்கிற்காக வாகனத்தை தந்துதவிய சிரஞ்சீவி றில்லஸ் உரிமையாளருக்கும் மற்றும் பொருட்களை பகிர்ந்தளித்த எங்கள் தொண்டர்களுக்கும் எமது நன்றிகள் என பூநகரி மத்திய நண்பர் விளையாட்டுக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.