உயர்தர மாணவர்களுக்கான விசேட வகுப்புகளுக்கான முற்பதிவுகள் ஆரம்பம் .

உயர்தர மாணவர்களுக்கான விசேட வகுப்புகளுக்கான முற்பதிவுகள் ஆரம்பம் .

புலம்பெயர்ந்து வாழும் பூநகரி உறவுகளின்  நிதிப்பங்களிப்போடு  கனடா பூநகரி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரின் மேற்பார்வையில் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள கலைக்கதிர் கல்வி நிலையத்தில் உயர்தர மாணவர்களுக்கான விசேட வகுப்புகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளனர் .குறித்த வகுப்புகளில் கலந்து கொள்வதற்கான முற்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன .குறித்த விடயம்  தொடர்பாக கலைக்கதிர் கல்வி நிலைய நிர்வாகம்  அறிக்கையினை   வெளியிட்டுள்ளது .அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது .


2020 பரீட்சைக்கு தோற்றவுள்ள க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் ஆரம்பம் 29.06.2020. மாணவர்களின் நலன் கருதியும் எமது ஒழுங்குபடுத்தலுக்கும் இலகுவாக 25.06.2020. க்கு முன்னர் 077 105 7512 தொலை பேசி இலக்கத்தினூடாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .

குறிப்பிட்ட திகதிக்கு பின்னர் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபபட மாட்டாது.பதிவு செய்யப்படும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் ,விசேட வினாத்தாள்களுக்கான அனுசரணையினை பூநகரி சமூக அபிவிருத்திச் சங்கம் கனடா வழங்கவுள்ளனர் .

நன்றி
நிர்வாகம்
கலைக்கதிர் கல்வி நிலையம்.